அவனும் என் மகன் தான்.. இதயம் இனித்தது கண்கள் பனித்தன.. வெர்ஷன் 2.0!

 
உதயநிதி அழகிரி

தமிழக அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின், முதன்முறையாக  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக, மதுரைக்கு  வந்திருந்தார். மதுரை வரையில் வந்திருந்து அழகிரியைப் பார்க்காமல் போனால் எப்படி? அப்படியே மதுரையில் பெரியப்பா மு.க.அழகிரியை உதயநிதி சந்திக்கச் சென்றார்.

அழகிரி உதயநிதி

உதயநிதியை வரவேற்க, வீட்டு வாசலில் அழகிரியும், அவருடைய மனைவி காந்தியும் காத்திருந்தனர். உதயநிதி வந்து, பெரியப்பாவுக்கு சால்வை அணிவித்து, அவருடைய காலில் விழுந்து ஆசி பெற்றார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷூம் இருந்தார்.

இரவு உணவு முடித்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி கூறியதாவது: உதயநிதி வந்து என்னை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, முதல்வராக தம்பியும், அமைச்சராக தம்பி மகனும் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. அவனும் எனக்கு மகன் தான் என்றவரிடம்  'உதயநிதி சந்தித்ததால், மீண்டும் திமுகவில் நீங்கள் இணைவீர்களா?'  என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அழகிரி

இதற்கு பதிலளித்து பேசிய அழகிரி, 'அதை என் தம்பி தான் முடிவு செய்ய வேண்டும்' என்று பதிலளித்தார். 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web