தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி மீண்டும் அதிகனமழை!! உருவாகும் புதிய காற்றழுத்தம்!!

 
மழை

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிய சக்கரங்கள் உருவாகப்போவதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் நாளை தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. டிசம்பர் 5ம் தேதி நாளை மறுநாள்  குறைந்த காற்று தாழ்வு பகுதி உருவாகக்கூடிய சாதகமான நிலை நிலவி வருகிறது.

மழை நிலவரம் !! வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்!!

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  தமிழகம்,  புதுச்சேரி  நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்  தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான அளவில் பரவலாக மழை பெய்யலாம்.

மழை

டிசம்பர் 5 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் மிகக்கன மழை பெய்யலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அத்துடன் டிசம்பர் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் இப்பகுதிகளில்  மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web