நயன்தாராவை கிண்டல் செய்த பிரபல நடிகை! நயன்தாரா பதிலுக்கு என்ன சொன்னார்!?

 
மாளவிகா நயன்

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகைநயன்தாரா. இவர் தமது பேச்சுக்களால் பல நேரங்களில் சர்ச்சையில் சிக்கி கொள்வதுண்டு. அதே போல் நடிகை நயன் பட விழாக்களுக்கு வருவது இல்லை என்ற விமர்சனங்கள் திரையுலகில் இருந்து வருகின்றன. அவர் நடிக்கும் படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது தயாரிப்பாளர்கள் ஆதங்கம்.  இந்நிலையில் ஒரு நேர்காணலில்  நடிகை நயன்தாரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில்  "நான் ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் இல்லாத படங்கள் தான். இதனை நான் யோசித்ததுண்டு.

null



அந்த சமயத்தில் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு சென்றாலும் நடிகைக்கு மரியாதை இருக்காது. சினிமாவில் நடிகைகளும் சமமாக நடத்தப்பட  வேண்டும் என்பதே எனது ஆசை. இப்போது தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. தயாரிப்பாளர்களும் கதாநாயகிகளை மையமாக வைத்து படம் எடுக்க முன்வருவது மகிழ்ச்சியான விஷயம்.  இதற்கு முன் தி. நகரில் உள்ள ப்ரிவியூ தியேட்டரில் கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு வந்த நடிகை  நயன்தாரா அங்கு திரண்ட ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் கனெக்ட் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட புரோமோசனில்  யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்  நடிகை நயன் தாரா தொகுப்பாளினி டிடியிடம் இந்த கருத்துக்களை தெரிவிக்கிறார்.  விமர்சனங்கள்  அப்போ இல்ல இப்ப வரைக்கும் வந்திட்டு தான் இருக்கு.  உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது.

 

இயக்குனர்கள் சொல்றத செய்யறேன்.அவ்வளவுதான்.சமீபத்தில் ஒரு நடிகையின் பேட்டியை பார்த்தேன், என் பெயரை சொல்லாமல்  என்னைப்பற்றி தான் சொல்லி இருந்தார். ஒரு ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே பஃல் மேக்கப்பில் இருந்தாங்க, எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். அதுக்காக ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப்போட்டுக்கிட்டு தான் நடிக்கணும்னு அவசியம் இல்லையே. கமர்ஷியல் பிலிம், ரியலிஸ்டிக் பிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் பிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செயப்படும். ஆனால், அவங்க சொன்னது கமர்ஷியல் பிலிம்பில் பற்றிதான். அந்த சீனுக்கு நான் சோகமாகத்தான் மேக்கப்போட்டுக்கொண்டு போனேன்

நயன்

ஆனால் என் டைரக்டர் எதுக்கு இவ்வளவு சோகம். தேவையில்லை என்றார். ஏன் என்றால் அது கமர்ஷியல் பிலிம் என நயன்தாரா பேட்டியில் கூறினார். இந்த நடிகை குறித்து அவரது ரசிகர்கள் நயன்தாராவை கேலி செய்த நடிகை யார்  என  அவர்கள் அலசி ஆராய்ந்து அது யார் என்று கண்டுபிடித்து அவர் பேசிய வீடியோவையும் வெளியிட்டு இருந்தனர்.  அந்த நடிகை மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தான். நடிச்சதே 3 படம் அதுக்குள்ள நயன்தாராவை பற்றி கிண்டலடிக்கிறியா? எனவும், ஏய் பவுடர் மூஞ்சி அவ்வளவுதான் எனவும் நயன் தாராவின் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web