டிசம்பர் 6ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! கொண்டாடுங்க மாணவர்களே!!

 
திருவண்ணாமலை

பஞ்ச பூத சிவ ஆலயங்களில் அக்னி தலமாக கொண்டாடப்படுவது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள   அருணாசலேஸ்வரர் கோவில்.இந்த ஆலயம்  உலக பிரசித்தி பெற்றது. இங்கு மலையே கடவுளாக பாவிக்கப்படுகிறது. சிவபெருமானின் அடிமுடி காண பிரம்மாவும், விஷ்ணுவும் தேடி தோல்வியை ஒப்புக்கொண்ட தலமாக கருதப்படுகிறது. இங்கு பல வகையான விழாக்கள் அனுசரிக்கப்பட்ட போதிலும் இந்த ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வர்.

திருவண்ணாமலை

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த திருவிழா மிகமிக  எளிமையான முறையில் நடைபெற்றது. சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டன. நடப்பாண்டிற்கான  கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன் தினம் நவம்பர் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப நிகழ்ச்சி டிசம்பர்  6ம் தேதி  நடைபெற  இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை  4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீபதரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

உள்ளூர் விடுமுறை

 நடப்பாண்டில் இந்தியா முழுவதும் இருந்து 20 லட்சம் பக்தர்கள் வருகை தரலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்களின் தேவைகள் மற்றும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.   இதற்காக  திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web