இன்று பிற்பகல் மற்றும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! கலெக்டர் அதிரடி உத்தரவு!!

 
கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று மாலைக்குள் மாண்டஸ் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

மாண்டஸ் புயலால் இன்று முதல் 4 நாட்கள் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யலாம்.  சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை அதி கனமழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று பிற்பகல் மற்றும் நாளையும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web