”இவ்வளவு சீக்கிரம் பிரிந்து செல்வார் என எதிர்பார்க்கவில்லை!!” கண்கலங்கிய ரஜினி!!

 
ரஜினிகாந்த்

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினிகாந்த் நேரில் சுதாகரின்  உடலுக்கு  அஞ்சலி செலுத்தினார். சுதாகர் மறைவு குறித்து ” சுதாகர் எனது நீண்டகால நண்பர். என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்தவர். அவர் 2 வருடங்களாகவே உடல்நலக்குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்து செல்வார் என எதிர்பார்க்கவில்லை. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என தம்முடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த பட வெற்றிக்கு பிறகு தற்போது  ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  ஜெயிலர்  திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தை அடுத்து லைக்கா நிறுவன தயாரிப்பில் “ லால் சலாம் “ படத்தில் நடிக்க உள்ளார். 

சுதாகர்


நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக  உயிரிழந்தார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதாகர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மரணம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.2022 நவம்பரில் சுதாகர், தனது உடல் சிகிச்சை குறித்தும், அதற்காக  ரஜினிகாந்த் செய்யும் மருத்துவ உதவிகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்  "தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைக்கும் வகையில் பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் ரஜினிகாந்தே கொடுத்து உதவினார். அவருடைய ஆதரவும் அன்பும் இப்போதும் தொடர்கிறது. அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.எனது சிகிச்சைக்கான மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல் நிதி திரட்டினார். இது தலைவர் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற  தகவல் பொய்யானது. இது போல் வரும் செய்திகள் அவருடைய மதிப்பை குறைப்பதாக உள்ளது.இதற்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.சுதாகரின் மரணத்திற்கு ரஜினி ரசிகர்கள் பலர் தமது இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web