எனக்கு மரியாதையில்ல!! கண்ணீருடன் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் ரொனால்டோ!!

 
ரொனால்டோ

மிகப் பிரபலமான  கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர்.  இவர்  2003ல்   முதன்முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார்.  2009ல் ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ , 2018ல் யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 3 ஆண்டுகளாக விளையாடியவர்,  மான்செஸ்டர் அணியில் இணைந்தார். 

ரொனால்டோ


தற்போது அணியின் பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  "அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை. பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

 


இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர்  அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் எனவும், இதுவரை மான்செஸ்டர் அனிக்காக விளையாடிய ரொனால்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web