அஜித்தைப் பார்க்க 8 வருஷமா ட்ரைப் பண்ணி டயர்ட் ஆகிட்டேன்.. சுரேஷ் சந்திராவுக்கு தான் வெளிச்சம்! பிரபல ஹிட் இயக்குநர் வருத்தம்!

 
அஜித் குடும்பம்

கை வைக்கிறது எல்லாம் நல்ல சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிற படமாக அமைந்து விடுகிறது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கு. யார் என்ன என்று தெரியாமல் அதிகளவிலான ஆர்ப்பாட்டம் எதுவுமே இல்லாமல் வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் ரிலீஸானாலும், இன்று வரையில் காதலர்களும், நல்ல சினிமா ரசிகர்களும் மொழி தாண்டி ‘பிரேமம்’ படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்திலும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ‘நேரம்’ என்ற நேரடி தமிழ் படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார்.‘நேரம்’ படமும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்துப் போய், ரசிகர்களிடம்  நெருக்கமானார். 

இந்நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கி இருக்கிறது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிட்டத்தக்கது.

ajith

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரனிடம் கமெண்டில், அஜித்துடன் ஒருப்படம் பண்ணுங்க தலைவா, என ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு அல்போன்ஸ் புத்திரன் அளித்த பதில் தான் தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, அஜித் சாரை இது வரைக்கும் மீட் பண்ண முடியல. நிவின் ஒருமுறை அஜித் சாருக்கு பிரேமம் படம் பிடித்துள்ளதாக கூறியிருந்தார். பிறகு, நான் ஒரு 10 முறை அவரின் வலது கை மற்றும் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் அஜித் சாரை சந்திக்க வேண்டி நேரம் கேட்டு இப்போது வரையில் 8 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு வயதாவதற்குள்ளாக அஜித் சாரை பார்த்தால் படம் பண்ணுவேன்.

ajith

ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும் போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி? முயற்சி செய்து செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். பின்னர் நீங்களும் என்னை மாதிரி ஒரு ஏகே ரசிகரென நினைத்து அமைதியாக கடந்து விடுவேன். ஏகே ஸாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் படம் 100 நாள் ஓடும்.ம்ம். நான் பார்க்க நேரம் கேட்டது அஜித் சாருக்கு தெரியுமான்னே தெரியலை.. இல்லை.. அவர் உங்களைச் சந்திக்க விரும்பலைன்னாவது தகவல் சொல்லி இருக்கலாம். அஜித் சாரின்  மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கே வெளிச்சம் என வருத்தப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web