வளர்ப்பு மகனின் தந்தையை அட்ஜெஸ்ட் செய்யலைன்னா வளர முடியாது! ஆவேசமான காயத்ரி ரகுராம்!

 
காயத்ரி ரகுராம் அண்ணாமலை

இம்மாதம் 27ம் தேதி  முதல் தமிழகம் முழுவதும் பாஜகவை கண்டித்து நடிகை காயத்ரி ரகுராம் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்திற்கு காயத்ரி ரகுராம் விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் அண்ணாமலை தலைமையின் கீழ், பாஜகவில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி, பாஜகவில் இருந்து வெளியேறினார் நடிகை காயத்ரி ரகுராம். அதன் பின்னர், தொடர்ந்து அண்ணாமலை மீது பகீரங்கமாக குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய போது அண்ணாமலை எரிச்சலானது எல்லாம் தனிக் கதை. இந்ந்லையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறித்தும் காரசாரமாக விமர்சித்திருந்தார் நடிகை காயத்ரி ரகுராம். பெண்ணைப் பற்றி தவறாக பேசும் ஒரு தலைவருக்கு இஸட் வகை பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவு எடுத்தேன். பாஜவில் பெண்கள் பாதுகாப்பு சூப்பர் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில்  நடிகை காயத்ரி ரகுராம் "பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் இதைச் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்" என்று பதிவிட்டுள்ளார். 

நடிகை காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்! நேரில் விசாரணைக்கு ஆஜாராக உத்தரவு!

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சுமத்திய காயத்ரி ரகுராம், பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளதாகவும் குற்றம் சுமத்தினார்.  பாஜகவிடம் தர்மம் இல்லை. கட்சியில் புதிதாக சேர்ந்த அனைத்து பெண்களும் இதனை விரைவில் உணர்ந்து கொள்வார்கள். நீங்கள் வளர்ப்பு மகனின் தந்தையுடன் நெருக்கமாக இல்லாவிட்டால், நீங்கள் வளர மாட்டீர்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web