இலஞ்சம் தரலைன்னா முடியவே முடியாது!! வசமாக சிக்கிய அரசு ஊழியர்!!

 
சந்தோஷ்

திருச்சி கே கே நகரை சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவருக்கு இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விடலாம் என்று முடிவு செய்து வாடகைக்கு விட்டுள்ளார். அதன் காரணமாக தனது வீட்டின் மின் இணைப்பினை வீட்டு மின்இணைப்பில் இருந்து வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு தென்னூர் ஈபி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

மின் கட்டணம்

அங்கு உறையூர் பகுதிக்குரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன் என்பவர் உங்களுடைய வீட்டை கமர்சியலுக்கு வாடகைக்கு விட்டுள்ளீர்கள். நான் ரிப்போர்ட் எழுதி உங்களுக்கு அபராதம் விதித்தால் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வரும்.  அது வராமல் செய்ய வேண்டும் என்றால் 15 ஆயிரம் ரூபாய் தனக்கு லஞ்சமாக கொடுத்தால் Tariff Change செய்து கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். அதற்கு சந்தோஷ் தான் ஏற்கனவே டேரிஃப் சேஞ்ச் செய்வதற்கு மனு அளித்துள்ளதாகவும் அந்த மனுவின் அடிப்படையில் மாற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று சொன்னதன் பேரில் 3000 ரூபாய் குறைத்துக் கொண்டு 12 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் டாரிஃப் சேஞ்ச் செய்து கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

போலீஸ்

லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திரு மணிகண்டன் அவர்களின் தலைமையிலான குழுவினர் சந்தோசுக்கு அளித்த ஆலோசனையின் பெயரில் சந்தோசிடமிருந்துஜெயச்சந்திரன் ரூபாய் 12000 லஞ்சமாக கேட்டு வாங்கும்போது தென்னூர் மின்வாரிய  அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயச்சந்திரனைகையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web