அருவியில் தண்ணீருடன் விழுந்த உடும்பு!! குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம்!!

 
உடும்பு

 

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிகனமழை காரணமாக குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் அங்கு அருவிகளில் உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர்.
 மெயின் அருவியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி குளிக்கும் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

குற்றாலம்

இதில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள உடும்பு கீழே விழுந்தது. தண்ணீருடன் அடித்து வரப்பட்ட உடும்பு, பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு வளைவு மீது விழுந்ததில் அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக  தீயணைப்பு துறையினருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடும்பு
சுமார் 2 மணி நேரம் போராடி உடும்பை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். குற்றால அருவியில்  இது போன்று சில விலங்குகள் மேலே இருந்து கீழே விழுவது  வழக்கமான ஒன்று தான் என்றாலும் இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web