அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்ட மக்களே உஷார்!! வெளில போகும் போது குடை எடுத்திட்டு போங்க!!

 
மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகனமழை  கொட்டித்தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரங்களில் 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போதும் சில மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. அந்த வகையில் சென்னை ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர்  மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
இந்திய வானிலை ஆய்வு மையம் மழைநிலவரம் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால்  பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்துக்கொள்ள வேண்டும் . கடந்த வாரத்தில் வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதி  மிக மிக மெதுவாக ஆழ்ந்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. நேற்று சென்னைக்கு அருகே 150 கிமீ தூரம் வரை வந்து வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு மிக அருகில் வந்த இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே 40 கிமீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.  

மழை

இதனால் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நேற்று இரவு வடசென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த தாழ்வு பகுதி லேசான மழையை சென்னைக்கு கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. நாளை தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை தாண்டி மற்ற மாவட்டங்களில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்புகள் இல்லை.  சென்னையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web