மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு!! ஸ்டாலின் அதிரடி!!

 
ஸ்டாலின்


இன்று சென்னை தலைமை செயலகத்தில்  முதல்வர் தலைமையில்  மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வி , உயர்கல்வி முதன்மை செயலாளர்கள் உட்பட  12 துறைகளின் முதன்மை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஒரு  துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்க கூடாது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்பெறுவர்.  மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் தொழில் தொடங்கலாம். இதற்கு குறைந்த பட்ச கல்வி தொகுதி 8ஆகவும், வயது வரம்பு 45 ல் இருந்து 55ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகள்
இத்துடன் நகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுடன் உடன் உதவிக்காக ஒருவர் இலவசமாக பயணிக்கலாம். உதவி உபகரணங்கள், உதவி தொகை ,  விரைவாக வீட்டுமனை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . மாற்றுத்திறனாளிகளுக்கு  சாலையோரம் தள்ளுவண்டி நடத்த அனுமதியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. திருமண உதவி தொகை பரிசுப் பொருட்களுக்கு பதில் இனி ரொக்கமாகவே வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள்
மேலும் இவர்களுக்கு அரசு வளாகங்களில் ஆவின் மையம் அமைப்பதற்கு முன்தொகை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பணியிடங்களிலும் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இது தவிர  தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான பணிகள் அமைக்க கண்காணிப்பு குழுக்கள் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.இவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், வேலைவாய்ப்புக்கள் இவை அனைத்தும் சரியான வகையில் சேர்வதை உறுதி செய்ய உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web