விமான நிலையங்களில் அதிகரிக்கப்படும் கட்டுப்பாடுகள்!! ஜெட் வேகமெடுக்கும் கொரோனா!!

 
கொரோனா

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வந்த கொரோனா மெல்ல மெல்லகுறைந்து வந்தது. ஆனால் தற்போது சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளன.

ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள் தற்போது சீனாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அடுத்து மூன்று மாதங்களில் 20 லட்சம் பேர் வரை இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் உயிரிழக்க நேரிடலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் ஒருவர் இந்த புதுவகையான வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

இந்தியாவில் 3 பேருக்கு இந்த புதுவகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது மேலும் பீதியைக் கிளப்பி வருகிறது.

சீனா கொரோனா

சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இந்த புதுவகையான வைரஸ் பரவ துவங்கியுள்ளது. 
இந்நிலையில், பிரதமர் மோடி புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.  முன்னதாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுவது குறித்தும், இந்தியாவில் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்  ஸ்டாலின்  தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முதல்வருடன்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும்  பயணிகள்  மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். பரிசோதனை செய்யும் போது அறிகுறி இருப்பவர்கள்  தனிமைப்படுத்தப்பட வேண்டும்.  சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web