அதிகரிக்கும் முட்டை ஏற்றுமதி!! உற்பத்தியாளர்கள் உற்சாகம்!!!

 
முட்டை விலை உயர்வு! கல்லா கட்டும் தீபாவளி விற்பனை!

 தமிழகத்தின் முட்டை உற்பத்தி மண்டலமாக திகழும் நாமக்கல்லில் தினமும் 4 கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டு நுகர்வுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், வளை குடாநாடுகளான கத்தார், சவுதி, குவைத் உட்பட பல நாடுகளுக்கும் முட்டை அதிகளவு ஏற்றுமதியானது. சபரிமலை சீசன் தொடங்கிவிட்டதால் முட்டையின் விற்பனை சரிவது வாடிக்கையான ஒன்று என்று கருதிய ஏற்றுமதியாளர்கள் காட்டில் அடை மழை.

முட்டை
இப்போது, வளைகுடா நாடு களில் ஒன்றான கத்தாரில், பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடங்கி, டிசம்பர் 2வது வாரம் வரை நடக்கிறது. இதனால், உலகம் முழுவதும் இருந்து கால்பந்து ரசிகர்கள் கத்தாரில் குவிந்துள்ளனர். ஓட்டல்கள், உணவகங்களில் கூட்டம் களைகட்டியுள்ளது. இதனால், முட்டைத் தேவை அதிகரித்துள்ளது. கத்தார் மட்டுமின்றி, சுற்றியுள்ள நாடுகளிலும் உலகக்கோப்பைத் திருவிழா சூடுபிடித்துள்ளது.

முட்டை
இதனால், நாமக்கல் மண்டலத் தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதி ஒரு கோடியே 50 லட்சத்தில் இருந்து, 4 கோடியே 50 லட்சமாக அதிக ரித்துள்ளது. முட்டை ஏற்றுமதி கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளதால், நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்."கத்தார் உலகக்கோப்பை மட்டுமின்றி, துருக்கியில் கோழிப் பண்ணைகளில் இருந்து, பிற நாடு களூக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டை விலையும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், நாமக்கல் முட்டையின் விலை குறைவு என்பதால், கத்தார் மட்டுமின்றி, பல வளை குடா நாடுகளும் முட்டைக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து வளைகுடாவுக்கான முட்டை ஏற் றுமதி அதிகரித்துள்ளது " என்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web