இந்தியா த்ரில் வெற்றி!! கடைசி வரை திக்.. திக்.. நிமிடங்கள்!! ரசிகர்கள் உற்சாகம்!!

 
இந்தியா

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 12ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.சமீபத்தில் இலங்கையுடன் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா ஒயிட்வாஷ் செய்த பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது . ஆனால் இந்திய அணி கடைசி வரை போராடித்தான் வெற்றியடைய முடிந்தது.  நேற்று ஜனவரி 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வெற்றி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்தியா
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ஓட்டங்கள் விளாசினார்.  194 ரன்களில்  கில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா 34 ரன்கள் எடுத்தார்.  சூரியகுமார் யாதவ் 31 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 349 ரன்களை குவித்திருந்தது. 350 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடங்கிய  நியூசிலாந்து அணி முதலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கான்வே 10 ரன்களும், ஓட்டங்களிலும், நிக்கோலஸ் 18 ரன்களும்,  டேரில் மிட்செல் 9 ரன்களும் எடுத்திருந்தனர். 

இந்தியா
கேப்டன் டாம் லாத்தம் 24ரன்களில்  ஆட்டம் இழக்க 131 ரன்களில்  6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ஆனால் அடுத்ததாக களமிறங்கிய மைக்கேல் பிராஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்டனர்  இருவரும்  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மைக்கேல் பிராஸ்வெல் 57 பந்துகளில் 100 ரன்களை எட்டிப்பிடித்து  இந்திய அணிக்கு ஷாக் கொடுத்தார். மிட்செல் சாண்டனரும் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு ஒரே ஒரு  விக்கெட்டிற்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் திக், திக் நிமிடங்களுடன் இந்திய அணி ஆடிக்கொண்டிருந்தது. 3வது பந்தில் பிராஸ்வெல் ஆட்டமிழக்க இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் சர்வதேச தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web