லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் இந்திய தந்தை காலமானார்!! பிரதமர் இரங்கல்!!

 
டெம்ப்டன் எரிக்

இந்தியாவில் 'லேப்ராஸ்கோபிக்' சிகிச்சையின் தந்தை: டாக்டர் டெம்டன் எரிக் மும்பையில் காலமானார் மருத்துவ உலகில் கத்தியின்றி , ரத்தமின்றி அறுவைசிகிச்சை முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உடலை அறுக்காமல் சிறு துளையிட்டு கணினி திரையின் உதவியுடன்  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் சிகிச்சை தான்  லேப்ராஸ்கோபிக்  அல்லது சாவி துளை அறுவை சிகிச்சை என்கிறோம். இந்தியாவில்  லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை பிரபலபடுத்தியவர் டாக்டர் டெம்டன் எரிக் உத்வாடியா. இவருக்கு வயது 88. இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். மகாராஷ்டிராவில் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் டெம்டன் நேற்று காலை 11.15 மணிக்கு  சிகிச்சை பலனின்றி காலமானார். இந்திய பிரதமர் மோடி டெம்டன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெம்ப்டன் எரிக்
மோடி இது குறித்து வெளியிட்ட இரங்கல் பதிவில் ''மருத்துவத் துறையில் அழிக்க முடியாத தடயத்தை டாக்டர் டெம்டன் பதிவு செய்துள்ளார். மருத்துவ சிகிச்சையில் அவரின் புதுமை மூலம் காலாகாலத்திற்கும் நினைவு கூரப்படுவார். அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவத்துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார். 


மகாராஷ்டிர மாநிலம் பைகுலாவில் உள்ள ஜேஜே அரசு மருத்துவமனையில் டாக்டர் டெம்டன் பல ஆண்டுகள் பணிபுரிந்து  வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பிரீச் கேண்டி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் பணிபுரிந்தார். டாக்டர் டெம்டனின் சிறந்த மருத்துவ சேவைக்காக மத்திய அரசு 2017ல் பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவித்தது.
டாக்டர் டெம்டனின் முன்னாள் மாணவர் டாக்டர் தீப்ராஜ் பண்டார்கர் , ''இந்தியாவிலேயே முதல் முறையாக ஜேஜே மருத்துவமனையில்  1990 மே 31ம் தேதி டாக்டர் டெம்டன் மேற்கொண்ட லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை தான் ஆசியாவிலேயே முதல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை'' என தெரிவித்துள்ளார். 

rip
அவரின்  புதிய முயற்சிக்கு ''இந்தியா போன்ற நாடுகளில் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் அவசரப்பட கூடாது'' என  பல்வேறு எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அதற்கெல்லாம் டெம்டன் கலங்கவில்லை .  ''எல்லா பிரச்சினைகளும் தீரும் வரை காத்திருந்தால், வளர்ச்சி என்பதே இருக்காது'' என டாக்டர் டெம்டன் உறுதியாக தெரிவித்தார். முதல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததும்  இந்தியா  முழுவதும்  பயணம்  மேற்கொண்டு மருத்துவத் துறையினரை சந்தித்து லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறையை பிரபலப்படுத்தினார்.
இதனை மருத்துவதுறையில் புகுத்துவதை ஒரு இயக்கமாகவே  நடத்தி வெற்றிவாகை சூடியவர். டாக்டர் டெம்டனின் இறுதிச் சடங்கு டூன்கர்வாடி பகுதியில் நேற்று நடை பெற்றது. மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web