காதலியை மணந்தார் இந்தியாவின் ஆல் ரவுண்டர் அக்சர் படேல்! வைரலாகும் வீடியோ!

 
அக்சர் படேல்

அதோ.. இதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்த ஜோடி, ஒரு வழியாக கல்யாணம் செய்து கொண்டார்கள். தனது நீண்ட நாள் காதலியான மேஹாவை கரம் பிடித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல். இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 

இந்த திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்சரும் மேஹாவும் நீண்ட நாட்களாகவே காதலித்து வந்தனர். பல இடங்களுக்கு ஜோடிப் புறாக்களாகவும் சுற்றி வந்தனர். மேஹா படேல் உணவியல் நிபுணரான பணிபுரிந்து வருகிறாஉர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி  மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  திருமணத்துக்கு ஒரு வருடம் இடைவெளி விட்ட  ஜோடி, இந்த வருஷ குடியரசுத்  தினத்தன்று குஜராத்தின் வதோதராவில் திருமணத்தை செய்து கொண்டனர். 



திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

அக்சர் படேல்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு திருமணம் நடைப்பெற்ற நிலையில், அடுத்த மூன்று நாட்களிலேயே இரண்டாவது இந்திய வீரர் அக்சர் படேலும் திருமணம் செய்து கொண்டுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web