அடப்பாவிகளா... ஸ்கூல் பஸ்ல 130 மாணவிகள்.. மூச்சு திணறி மயங்கிய மாணவிகள்! மதுரையில் பரபரப்பு!

 
பள்ளி மாணவிகள் மயக்கம்

அடப்பாவிகளா... இருக்கிற பிரச்சனைகள் போதாதா? ஏற்கெனவே தமிழகத்தில் தினந்தோறும் எங்கோ.. ஏதோவொரு மூலையில் மாணவிகள் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், பணம் சம்பாதிப்பதற்காக 130 மாணவிகளை ஒரே பேருந்தில் அடைத்து வைத்து, அவர்களை வீட்டில் விடுவதற்காக கிளம்பி இருக்கிறது பள்ளி பேருந்து. அத்தனை  மாணவிகளும் மூச்சு முட்ட தான் தினந்தோறும் தங்களது வீடுகளுக்குச் செல்கிறார்கள்.. பெற்றோர்களும் மதிப்பெண் பெறுகிற இயந்திரங்களாக தங்களது மகள்களை உருவாக்கும் பள்ளியைத் தேடி தேடி சேர்த்து விட்டு, இந்த மாதிரியான பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். என்று திருந்துமோ இந்த சமூகம்?

மதுரை மாவட்டம், திருப்பாலை பகுதியில் அமைந்துள்ளது அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி . இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன் தினம் பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு செல்வதற்காக மாணவிகள் பள்ளிப் பேருந்தில் ஏறினார்கள். ஒரே பேருந்தில் 130 மாணவிகள் பேருந்தில் ஏற்றப்பட்டனர். கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பள்ளி மாணவிகள் மயக்கம்

இது குறித்த தகவல் பள்ளிப் பேருந்து ஓட்டுனருக்கு தெரிய வந்ததால், அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் மாணவிகளுடன் பள்ளிப் பேருந்தை அரைமணி நேரமாக மறைத்து நிறுத்தி வைக்கத்திருந்தார் பேருந்து ஓட்டுனர். மிகச் சிறிய சந்தில் பள்ளிப் பேருந்தில் அளவுக்கு அதிகமாக இருந்த கூட்ட நெரிசலால் 4 மாணவிகள் மூச்சுத் திணறி மயக்கம் போட்டு பேருந்துக்குள்ளேயே விழுந்து விட்டனர்.  உடனே அவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ்
தற்போது மாணவிகள் 4 பேரும் நலமுடன் இருப்பதாக  அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரே வாகனத்தில் அதிக அளவிலான மாணவிகளை ஏற்றிச் சென்றது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web