டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா!! ரசிகர்கள் உற்சாகம்!!

 
சர்வதேச திரைப்பட திருவிழா

சர்வதேச சினிமா பிரியர்களை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படும். இந்த விழாவில் மிக  சிறந்த சர்வதேச மற்றும் இந்திய பனோரமா திரைப்படங்கள் திரையிடப்படும். இதே விழாவில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்படும்.

சர்வதேச திரைப்பட திருவிழா
அந்த வகையில் 20வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் 15 முதல் 22 வரை சென்னையில் நடத்தப்பட உள்ளது.  இந்த திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகும் திரைப்படங்கள் பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாளை முதல் திரையரங்குகள் 100 சதவிகிதம்  பார்வையாளர்களுடன் அனுமதி!!
மேலும் இந்த விழாவில் 48 நாடுகளைச் சேர்ந்த 107 படங்கள் திரையிடப்பட உள்ளன. தற்போது திரைப்பட விழாவுக்கான தேதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ள படங்கள், பதிவுக் கட்டணம் குறித்த மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவல் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web