அத்தனையும் பொய்யா கோபால்..?! ரோல்ஸ் ராய்ஸ் எல்லாம் கிடையாது! சவுதி மன்னரைச் சுற்றும் வதந்‘தீ’!

 
சவுதி மன்னர்

சவுதி அரேபிய கால்பந்து அணி வீரர்கள் அனைவருக்கும் ரூபாய் 10 கோடி  மதிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் காரை சவுதி மன்னர் பரிசளிப்பதாக நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் வதந்தீ பரவி வைரலானது. ஆனால், அப்படி எல்லாம் சவுதி  மன்னர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் திருவிழாவைப் போல உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் கொண்டாடி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை விட, அதிகளவில் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்து. இந்நிலையில், கால்பந்து விளையாட்டுகளில் பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை தோற்கடித்த சவுதி அரேபியா அணியின் வீரர்களை அந்நாட்டில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், குறும்புக்கார ரசிகர்கர் ஒருவர், மன்னர், சவுதி அணி வீரர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10 கோடி  மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிப்பதாக பரப்பி விட்டுள்ளார்.

இந்த செய்தி நேற்று இணையதளங்களில் பரவி வைரலானது. அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற சவுதி அரேபியா அணி வீரர்களைப் பாராட்டும் வகையிலும், நாட்டு  மக்கள் இந்த வெற்றியை முழுதாக அனுபவிக்கும் வகையிலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவூத் சவூத் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சவுதி மன்னர்

தற்போது, கால்பந்து விளையாட்டில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் அறிவித்ததாக பல நாடுகளிலும் பத்திரிக்கைகள் பாராட்ட துவங்கி விட்டன. ஆனால், அரண்மனை வட்டாரம் இந்த செய்தியை உறுதி செய்யவில்லை. அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்று உறுதி செய்தது. 

சவுதி அரேபியா கால்பந்து

இந்த உலககோப்பை கால்பந்து போட்டி தான் மெஸ்ஸிக்கு கடைசி போட்டி என்று கூறப்படும் நிலையில், நேற்றைய போட்டியில் அர்ஜெண்டினா அணி மீண்டும் வீறு கொண்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!

From around the web