ரூ.100 கோடி வசூல் எல்லாம் ஓ.கே.? ஆனாலும் பொங்கல் ரேஸ்ல.. அஜித் படம் தான் கெத்து!

 
வாரிசு துணிவு

பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் ‘வாரிசு’ அஜித்தின் ‘துணிவு’ படங்களில் எது டாப்பு? கட்டுரையின்  முடிவில் பார்க்கலாம் வாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.. இந்த இரு படங்களில், முதன் முதலாக ரூ. 100  கோடி க்ளப்பைத் தொட்ட படம் விஜய்யின் ‘வாரிசு’. விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள ‘வாரிசு’ படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் ‘துணிவு’ இன்றைய வசூலையும் சேர்த்து, ரூ.100 கோடி க்ளப்பில் இணைகிறது. 

நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த பொங்கலுக்கு விஜய், அஜித் நடித்திருக்கும் படங்கள் ஒன்றாக ரிலீசாகி ரசிகர்களை இம்சித்தன. ரசிகனின் உயிரையும் காவு வாங்கின. வாய் கிழிய பேசும் நடிகர்கள், பல பிரச்சனைகளுக்குப் பின்னரும், எங்களின் பட ரிலீசுக்கு பேனர் வைக்காதீங்க.. பால் அபிஷேகம் செய்யாதீங்க.. பட்டாசு வெடிக்காதீங்க என்றெல்லாம் இதுவரையில் அறிக்கைகளை வெளியிடுவதில்லை. மாறாக நள்ளிரவு 1 மணிக்கு படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்று கூறி, அந்த நள்ளிரவு காட்சிகள் ஹவுஸ் புல்லாக வேண்டும் என்றும் காத்திருக்கிறார்கள். வழக்கம் போலவே இந்த பொங்கலுக்கு வெளியான இரண்டு படங்களுக்கும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்து, பால் அபிஷேகம் செய்து, பட்டாசு வெடித்து, நடனமாடி கொண்டாடினர்.

varisu

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள், சினிமா வெளியீட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை என மொத்தம் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் 1,168 தியேட்டர்கள் உள்ளன. இதில் பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு படங்களுக்கு சரிசமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தமிழ்நாட்டின் முன்னணி திரைப்பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவித்திருந்தது.

இந்த இரண்டு படத்திற்கும் சுமார் 500 திரையரங்கள் வரை ஒதுக்கப்பட்டு இருந்தது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா என சமூக வலைதளங்களில் ஆங்காங்கே பல சண்டை சச்சரவுகள் நடைபெற்று வந்தது.

வாரிசு

விஜய்யின் வாரிசு படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. உலகளாவிய வசூல் 3வது நாளுக்குப் பிறகு சுமார் ரூ.103 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டில் வாரிசு ரூ.49 கோடிக்கு மேல் வசூல் செய்து 50 கோடியை எட்ட உள்ளது. மொத்த உள்நாட்டு வசூல் மொத்தம் ரூ.78 கோடியை நெருங்குகிறது. இப்படம் வெளிநாட்டு சந்தையில் கிட்டத்தட்ட 25 கோடிகளை சம்பாதித்து 100 கோடி கிளப்பில் நுழைந்தது. அஜித்தின் ‘துணிவு’ ரூ.96 கோடியை நெருங்கிய நிலையில், இந்த இரு படங்களிலும் ‘துணிவு’ படமே பொதுமக்களை.. ஆமாங்க.. இந்த ரசிகர்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்காம... நிஜமான பொதுமக்களின் கணிப்பில் வெற்றி பெற்றுள்ளது. 

விஜய்யின் குடும்ப ட்ராமா கதை பொதுமக்களிடம் எடுபடவில்லை. பெரும்பாலானவர்களின் வாக்கு, துணிவு படத்துக்கு தான் இருக்கு. அதனால் பொங்கல் ரேஸில்  முந்திய படமாக துணிவு இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web