கலக்க வரும் “ஜெயிலர்” !!முதன் முறையாக ஒரே படத்தில் 3 சூப்பர் ஸ்டார்கள் !!

 
3 சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. ரஜினி காந்த்தின் 169வது படம் ஜெயிலர்.  இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய  நெல்சன் இயக்கி வருகிறார்.


இதில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு என  நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில்  பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். ஜெயிலர் படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெயிலர்

ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் இப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்படி மோகனலால் - ரஜினிகாந்த் இணையும் முதல் படமாக மட்டுமல்ல 3 மொழி  சூப்பர் ஸ்டார்கள் இணையும் முதல் படம் என்ற பெருமையையும் ஜெயிலர் படம் பெறுகிறது.  இந்த தகவல் ரசிகர்களை படத்தை காணும் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது. 
 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!