திருச்சியில் சூரியூரில் துவங்கியது ஜல்லிக்கட்டு! சீறிப் பாய்ந்த காளைகள்! ஆயிரக்கணக்கில் திரண்ட பார்வையாளர்கள்!

 
சூரியூர் ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன. திருச்சியில் இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி சூரியூரில் நடைபெறுகிறது. இன்று காலை சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மக்களின் பலத்த ஆரவார சத்தத்துடன் துவங்கியது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டியைத் துவக்கி வைத்தார்.

திருச்சி சூரியூரியில் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகள் பங்கேற்கின்றன. ஜல்லிக்கட்டு போட்டியில் 400  வீரர்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.  திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் இன்று(16.01.2023)  நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு

ஒவ்வொரு வருடமும் தை மாதத்தின் இரண்டாம் தேதி கோவில் திருவிழாவினை முன்னிட்டு  சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வந்த நிலையில், இன்று போட்டிகள் துவங்கி, நடைப்பெற்று வருகிறது.

400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு களத்திற்குள் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட, சமன்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வந்திருப்பதால் போட்டி நடைப்பெறும் இடத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  களத்திற்குள் உள்ள இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.


வாடிவாசலில் இருந்து சீறிப் பாயும் காளைகள் பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகளை கொண்டு பாதுகாப்பாக அமைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இப்பகுதி கிராம மக்கள், சிலிர்த்து வருகிற காளையையும், திமிலை அடக்க துள்ளி பாயும் வீரர்களையும் காண  மிகுந்த உற்சாகத்துடன்  திரண்டு வந்துள்ளனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க மோதிரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்க  விழா குழுவினர் செய்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க!

From around the web