வரலாற்றில் முதன்முறையாக மார்ச் 5ம் தேதி சென்னையில் ஜல்லிக்கட்டு!!

 
ஜல்லிக்கட்டு

தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நமது பாரம்பரியம். ஜல்லிக்கட்டுகள் பொதுவாக தமிழகத்தின் தென்பகுதியான மதுரை சுற்றுவட்டாரங்கள் நடத்தப்படும்.  ஜல்லிக்கட்டு என்றாலே  நினைவுக்கு வருவது  அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான்.  ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன் ஜல்லிக்கட்டுக்காக தலைநகர் சென்னையில் உள்ள மெரினாவில் நடந்த தன்னெழுச்சி போராட்டம்தான் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.

ஜல்லிக்கட்டு

எனவே சென்னையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா என்ற கேள்விகள் தொடர்ந்து  எழுந்து வந்தன.  அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடப்பாண்டில் முதன் முறையாக  மார்ச்  5ம்தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் மார்ச் 5ம் தேதி. அவரது 70வது பிறந்த நாளில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு

தலைநகரில்  ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படவில்லை என்ற ஏக்கம் இதன் மூலம் தீரும். இந்த போட்டியில் முதல்வரின் பெயரில் ஒரு காளை விடப்படும்.தமிழகம் முழுவதும் உள்ள 501 சிறந்த காளைகள்  இந்த மாடுபிடி போட்டியில் கலந்து உள்ளன.  மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்படும். இந்த  ஜல்லி்க்கட்டை நேரில் காண சுமார் 10000 பேர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள்  சரியாக செய்து முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web