ஜனவரி 8ல் ஜல்லிகட்டு!! களைகட்டும் வீதிகள், தோரணவாயில்கள்!!

 
ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது தமிழர்களின் பாரம்பரியம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட இருந்த நிலையில் பாதுகாப்பு  ஏற்பாடுகளில் குறைகள் இருப்பதால் போட்டியில் கலந்து கொள்பவர்கள் மாடுகளின் நலன் கருதி ஜல்லிக்கட்டு  ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் மாடு பிடிவீரர்கள், விழா அமைப்பாளர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து பரிசீலிக்கப்பட்ட பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் கவிதா ராமு அறிவித்திருந்தார். இதன்படி இதுகுறித்து போட்டியை நடத்தும் விழாக்குழுவினர் மற்றும் மக்களுடன்  பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 8 ம் தேதி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் என அறிவித்துள்ளார்.
 

ஜல்லிக்கட்டு

தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள்  புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில்  பிரசித்தி பெற்ற தமிழ் நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் கலெக்டர்  தலைமையில் சட்டத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  மற்றும் பல பிரபலங்கள் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற இருந்தது. 

ஏற்கனவே ஜனவரி 2ம் தேதி நடக்க இருந்த போட்டிகள் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பது மாடு பிடி வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த போட்டியில்  கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக காளைகள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் சுமார் 700 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜல்லிக்கட்டு மாடுகள்
இவர்களுக்கான பரிசோதனை மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனைகள் மருத்துவ குழுவினர்களால் நடைபெற்று வந்தது. வாடிவாசலுக்கான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.  காளைகள் செல்லும் இருபுறமும் தட்டி வைத்து அடைக்கும் வேலையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான மேடையும் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை  என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கலெக்டர் பார்வையிட்டபிறகு இந்த அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.  அதன்படி  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

நீதிமன்ற வழிகாட்டுதல் படி ஏற்பாடுகள் செய்த பின்னர் வேறு ஒரு தேதியில் அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி  தச்சங்குறிச்சியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காளைகள் வராமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.  ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அங்கே குவியத் தொடங்கியுள்ளதால் பெரும்  பரபரப்பு நிலவி வந்தது. தற்போது நாளை மறுநாள் போட்டிகள் வழக்கம் போல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வீரர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பி வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web