ஜனவரி 16ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை!

 
ரேஷன்

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 16ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்காக நேற்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு ஊழியர்கள் பணி செய்து வந்தனர். 

ரேஷன் விரல் பதிவு கைரேகை
இதற்கு பதிலாக ஜனவரி 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாற்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  நிர்வாக காரணங்களுக்காக ஜனவரி 16ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படாது.

ஏற்கனவே ஜனவரி 27ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது,  ஜனவரி 16ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.  ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற முடியாதவர்கள்  15, 16ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். இந்நிலையில்,  தற்போது ரேஷன் கடைகள் வரும் 16ம் தேதி இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள்

ஒவ்வொரு வருடமும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பொங்கல் தொகுப்பாக  இலவச வேஷ்டி , சட்டை , ரூ.1,000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, கரும்பு மற்றும் சக்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . ஜனவரி 2ம் தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது.  ஜனவரி  9ம் தேதி சென்னையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் 2.19 கோடி ரேஷன் அட்டைகளுக்கு  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரூ1000டன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு இதுவரை 92 சதவீதம் பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என  தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் டோக்கன் இல்லாதவர்களும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்

From around the web