வைராகும் வீடியோ!! பிரபல நடிகர் மீது செருப்பு வீச்சு!! ரசிகர்கள் கொந்தளிப்பு!!

 
தர்ஷன்

கன்னட திரைத்துறையில்  முன்னணி நடிகராக இருந்து வருபவர்  நடிகர்  தர்ஷன். இவர், கடந்த  சில நாட்களுக்கு முன்  ஒரு நிகழ்ச்சியில் அதிர்ஷ்டம் குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விட்டன.  பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனக்குரல்களும்,  எதிர்ப்பும்  கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என  கோரிக்கைகள் வலுத்தன. இந்நிலையில், அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி 26,2023ல் தர்ஷன் நடிப்பில்  'கிராந்தி' திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரசிகர்களில்  ஒருவர் தனது செருப்பை  தர்ஷன் மீது வீசியெறிந்தார்.


 அந்த செருப்பு தர்ஷனின் தோள் பட்டையில் பட்டு கீழே விழுந்தது.  தர்ஷனின் சர்ச்சை கருத்துகளுக்கு எதிராக மறைந்த நடிகர் ஒருவரின் ரசிகர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்திற்கு பதிலடி தரும் வகையில் நடிகர் சிவராஜ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தர்ஷன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் எனது மனதிற்கு வேதனை அளிக்கிறது. நடிகர்கள் யாரையும் ரசிகர்கள், அவமரியாதை செய்யக்கூடாது. இத்தகைய செயல்களை  ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் " எனக் கூறியுள்ளார்.


நடிகை ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். நடிகர்கள் தங்களது ரசிகர்களிடம் மற்ற நடிகர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் 'ட்ரோல்' செய்ய வேண்டாம் என கருத்து தெரிவிக்கலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளை இழிவுபடுத்தும் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என அறிவுறுத்தலாம். எல்லா துஷ்பிரயோகங்களும், கேவலமான வார்த்தைகளும் பெண்களை குறிவைத்தே  பேசப்படுகின்றன. இத்தகையை சமூக வலைதள கணக்குகளை தடுக்க வேண்டும்" என ஆவேசக் குரல் எழுப்பியுள்ளார். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web