ஜாலி!! 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை?! மாணவர்கள் கொண்டாட்டம்!!

 
விடுமுறை

தமிழகத்தில் கடந்த வாரத்தில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று டிசம்பர் 15ம் தேதி வியாழக்கிழமை முதல் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரையிலான  மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.

தேர்வு

அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  இதற்கான தேர்வு அட்டவணை சில வாரங்களுக்கு முன்பே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி  பெரும்பாலான பள்ளிகளில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. காலையில்  6, 8,12ம்   வகுப்புகளுக்கும், பிற்பகலில்  7,9,11ம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வுக்குரிய வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு

அந்தந்த பள்ளியின் ஆசிரியர் கட்டுப்பாட்டில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு விட்டன. அதன்படி தேர்வுக்கு சில நிமிடங்கள் முன்னதாகவே வகுப்பறைக்கு கொண்டு வினாத்தாள்களை  எடுத்து செல்ல வேண்டும். டிசம்பர் 23ம் தேதிக்க்குள் அரையாண்டு தேர்வுகள் அனைத்து பாடப்பிரிவுகளிலும் நடத்தப்பட வேண்டும்.  

தமிழகத்தில்  இன்று பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.  இந்த தேர்வுகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன.  காலையில் 9.45 மணி முதல் பகல் 1 மணி வரை பிளஸ்-2 மாணவர்களுக்கும்,  பிற்பகல் 1.45 முதல் மாலை 5 மணி வரை பிளஸ்-1 மாணவர்களுக்கும் தேர்வுகள்  நடைபெறுகின்றன. இதேபோல 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 19ம் தேதி தொடங்கி  டிசம்பர் 23ம் தேதி முடிவடைகிறது.

மேலும் 8, 9-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வும், 6, 7-ம் வகுப்புகளுக்கு 2ம் பருவ தேர்வுகளும் டிசம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. அனைத்து வகுப்புக்களுக்கும் டிசம்பர் 23ம் தேதியுடன் அரையாண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.  விடுமுறை முடிந்து ஜனவரி  2ம்தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வுக்கு பிறகு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web