போகியில் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!!

 
போகி

நாளை தை மாதம் தட்சிணயாயன புண்ணிய காலம் முடிந்து உத்திராயண புண்ணிய காலம் தொடங்குகிறது. அதனை வரவேற்கும் வகையில் இன்று ஜனவரி 14ம் தேதி சனிக்கிழமை போகித் திருநாள்.  போகியில் பழையன கழித்து புதியன புகுத்தல் வேண்டும் என்பது பழமொழி.இந்நாளில்  வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்துவது தான் வழக்கமாக இருந்து வருகிறது.

முன்பெல்லாம் இயற்கை சார்ந்த அதாவது ப்ளாஸ்டிக் சேர்க்காத பொருட்களை தீயிலிட்டு எரிப்பர். இதனால் காற்று மாசுபாடு என்பதே கிடையாது. ஆனால் தற்போதைய நாட்களில் அனைத்திலும் ப்ளாஸ்டிக் மயம் தான். இவைகளை எரிப்பதால் உருவாகும்  நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

போகி பண்டிகை திருநாளான இன்று வீடுகளை சுத்தம் செய்து சமையல் அறையில் அரிசி மாவினால் கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். அத்துடன்  அரிசி, பருப்பு, புளி, மிளகாய், சர்க்கரை இவைகளை தனித்தனி  கிண்ணங்களில் போட்டு வைத்து சிறிய விளக்கேற்றி வைக்கலாம்.  அணையாத விளக்காக இருந்தால் கூடுதல் சிறப்பு. மறந்தும் கூட இந்த நாளில் வீட்டை அசுத்தமாக விட்டுவிட வேண்டும். அத்துடன் வீட்டில் இருக்கும் நெய், தயிர், உப்பு இவைகளை கடன் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் மகாலட்சுமி வீட்டை விட்டு போய்விடுவாள் என்பது ஐதீகம். அதனால் மறந்தும் இவைகளை கடன் கொடுத்துடாதீங்க

போகி

பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல .நமது உடல் ஆரோக்கியத்திற்கும் அதுதான் மிகவும் நல்லது . நம் வாழ்வும் வளமும் மேம்பட, பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் சுற்றுச்சூழல்  நல ஆர்வலர்கள். இந்நிலையில்  நடப்பாண்டில் போகி பண்டிகைக்கு எரிப்பது குறித்து கன்னியாகுமரி கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உருவாக்கி வைத்தனர்.  

போகி

ஆனால் தற்போது போகி பண்டிகையின்போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்களை எரித்து விடுகின்றனர்.  இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல்   ஏற்படுகிறது. இதனால் போகிப் பண்டிகைக்கு குமரி மாவட்டத்தில்  பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்க்க வேண்டும். புகையில்லா போகியை கொண்டாடுவோம். சுற்றுச்சூழலை பேணிக் காப்போம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web