அமாவாசையன்று இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!

 
அமாவாசை

அமாவாசை தினத்தன்று மறந்து போய் கூட இந்த தவறுகளை  மட்டும் செய்யவே செய்யாதீங்க. நல்லது செய்யலைன்னாலும் பரவாயில்லை.. கெடுதல் செய்ய கூடாதுன்னு சொல்வாங்க இல்லையா? அது மாதிரி தெரியாம கூட இதைச் செய்யாதீங்க. இந்து மதத்தில் ஒவ்வொரு செயலுமே அறிவியலுடன் சம்பந்தப்படுத்தி தான் நம் முன்னோர்கள் காரண காரியத்தோடு வகுத்து வைத்திருக்கிறார்கள். எதற்காக செய்கிறோம் என்று தெரியாமலேயே அதை செய்து வந்த நாம், நாளடைவில் அந்த காரியங்களை பிற்போக்குத்தனம் என்றும் மூட நம்பிக்கை என்றும் பகுத்தறிவு பேசி, பின்னால் புத்தி தெளிந்து குல தெய்வம் எதுவென தேடிக் கொண்டிருக்கிறோம்.

பல குடும்பங்களில் இப்படி தான் இருக்கிறது. அதனால அமாவாசையன்று மட்டும் மறந்தும் இந்த தவறை எல்லாம் செய்யாதீங்க. அப்படி என்னென்ன தவறுகளை நமக்கு தெரியாமலேயே இத்தனை நாட்களா செய்து வந்திருக்கிறோம் என்று பார்க்கலாம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் பித்ருக்கள் தங்களது உறவினர்களை காண பூமிக்கு வருகை தருகின்றனர். அவர்களின் ஆசி பெறவும், அவர்களை திருப்தி அடையச் செய்யவும்  தர்ப்பணம் கொடுக்கிறோம்.

ஆடி அமாவாசையில்  தர்ப்பணம் செய்திட  ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசியும் கிடைக்கும் என்பது சாஸ்திர வாக்கு அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்கும் வரை வாசலில் கோலமிடுதல் கூடாது. நமது முன்னோர்களை வரவேற்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு நன்றி கூறி நமது வாழ்க்கை சிறக்க மனமுருக பிரார்த்தனை செய்ய வேண்டும். 

அமாவாசை

தர்ப்பணம் கொடுக்கும் போது இந்த தவறுகளை செய்யக் கூடாது. நம் பித்ருக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நிறைந்தவர்கள். அவர்களை இந்த அமாவாசையில் வழிபட்டால் புண்ணியமும், செல்வமும் சேரும் என்பது ஜோதிட அன்பர்களின் வாக்கு. நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.

அமாவாசை

காலை 6.30 மணிக்குள் அல்லது  மதிய வேளை அல்லது  சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. அதே போல் தர்ப்பணம் கொடுக்கும் போது  கோத்திரம், குலதெய்வம், 3 தலைமுறையின் பெயர்களைக் கூறி தர்ப்பணம் செய்ய வேண்டும். அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலமிடவும் கூடாது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web