கலைமாமணி விருது திரும்ப பெறப்படும்!! தமிழக அரசு அதிரடி!! குழப்பத்தில் கலைஞர்கள்!!

 
கலைமாமணி

தமிழகத்தில் இயல், இசை ,நாடகத்துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட விருது பட்டியல் குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த நையாண்டி மேள நாதஸ்வர கலைஞர் சமுத்திரம் ர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்  "2017ல் தமிழக அரசு என் கலைச் சேவையை பாராட்டி கலைமாமணி விருது வழங்கியது. நான், தமிழக இயல், இசை, நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். கலைமாமணி விருதுக்கு வயது வரம்பு, தகுதி, வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

கலைமாமணி

தகுதியில்லாதவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019 - 2020-ம் ஆண்டில் கலைமாமணி விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்யும் கூட்டம் 2021 பிப்ரவரியில் நடத்தப்பட்டது.  அந்த சமயத்தில் குழுவில் இருந்தவர்களிடம் தகுதியில்லாதவர்களை விருதுக்கு தேர்வு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். ஆனால் எதையும் பரிசீலிக்காமல் அவசர கதியில் விருது வழங்கப்பட்டுவிட்டது. விருது சான்றிதழில் தலைவர், உறுப்பினர் செயலாளர் கையொப்பம்  முத்திரைகள் இல்லை. எனவே, தகுதியற்றவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும். வருங்காலங்களில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன்படி சரியான நடைமுறையை பின்பற்றி கலைமாமணி விருது வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  

தமிழக அரசு

இது குறித்த விசாரனையில் தமிழக அரசு 'தகுதி அடிப்படையில் உண்மையான கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதா என நிபுணர் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டிருந்தால் ரத்து செய்து அவை திரும்ப பெறப்படும். மூத்த கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் உருவாக்கப்பட்டு அந்த வழிகாட்டுதல்கள் படி  இனிவரும் காலங்களில் தகுதியான கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  ' தமிழக அரசு தரப்பின் நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது' என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web