ஸ்ரீரங்கம் ஆலயத்தில் கனு பாரிவேட்டை! தங்க குதிரை வாகனத்தில் பாரிவேட்டை நடத்திய ரெங்கநாதர்!

 
ரெங்கநாதர் பாரிவேட்டை

இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் நம்பெருமாள் குதிரை வாகனத்தில் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நாட்களில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் வருடா வருடம் நடைப்பெறும். இவ்வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நம்பெருமாள் உபய நாச்சியார் சகிதம் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார். இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 7 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 8 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் உள்ள கனுமண்டபம் சேர்ந்தார்.


கனுமண்டபத்தில் ரெங்கநாதருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள் மாலை 4.30 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பாரிவேட்டை நடத்தியபடி தெற்கு வாசல் பகுதி ராஜகோபுரம் வரை சென்று பின் கோயில் திரும்பினார்.

ரெங்கநாதர் பாரிவேட்டை

நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக தெற்குவாசல் கடை வீதியில் இரு புறங்களிலும் காத்திருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி வந்த நம்பெருமாளை சேவித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரியும், இணை ஆணையருமான மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள், கைங்கர்யபரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web