மருத்துவ கல்லூரி மாணவி கடத்தல்! ஒரு வருஷம் கழித்து குற்றவாளிகளை நெருங்கிய போலீசார்! 2 பேர் கைது!

 
selpi

மும்பையில் மருத்துவ கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை நெருங்க முடியவில்லை என ஒதுக்கி வைத்திருந்த வழக்கை இணை கமிஷ்னர் லஷ்மி கெளதமியின் கீழ் போலீசார் மீண்டும் தூசு தட்டி, விசாரித்து இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை  கைது செய்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதியன்று மும்பை பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து காணாமல் போன மருத்துவ கல்லூரி மாணவி தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய 13 மாதங்கள் கழித்து குற்றவாளிகளை போலீசார் நெருங்கியுள்ளனர். மாணவியுடன் கடைசியாக சுக்தேவ் சிங் என்பவர் காணப்பட்டுள்ளதாக அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்டது. நேற்று முன் தினம் ஜனவரி 13ம் தேதி அப்துல் ஜப்பார் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். 

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மிகவும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று இணை கமிஷ்னர் கூறினார். இருப்பினும், காணாமல் போன மாணவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் இந்த வழக்கில் கொலையின் பிரிவுகளை போலீசார் இன்னும் விசாரிக்கவில்லை.

மாணவி கடத்தல் காணவில்லை

குற்றப்பிரிவின் கூற்றுப்படி, கடந்த நவம்பர் 29, 2021 அன்று, காலை 9:58 மணியளவில், மாணவி மும்பையில் உள்ளூர் ரயிலில் ஏறி அந்தேரி ரயில் நிலையத்தில் சென்று தனது தேர்வுகளை எழுதியுள்ளார். அதன் பின்னர், தேர்வு முடிந்ததும் அவள் மற்றொரு ரயிலில் ஏறிச் சென்று பாந்த்ரா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி பேண்ட் ஸ்டாண்ட் பகுதியை அடைந்திருக்கிறாள்.

குற்றப்பிரிவு போலீசார் மாணவியின் செல்போன் நெட்வொர்க்கை முழுமையாக ஆய்வு செய்ததில், அந்த பகுதியில் மாணவி சுற்றித் திரிந்ததைக் கண்டறிந்துள்ளனர். மேலும் ஒரு சொகுசு நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா ஒன்றில், நள்ளிரவு 12:30 மணிக்கு மாணவி கடற்கரையை நோக்கிச் செல்வதும் பதிவாகி உள்ளது தெரிந்தது.

குற்றப்பிரிவின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட சுக்தேவ் சிங்குக்கு எதிராக அனைத்து  ஆதாரங்களும் சிக்கியுள்ளன. ஏனெனில், கல்லூரி மாணவியுடன் சுக்தேவ் சிங் செல்ஃபி எடுத்த புகைப்படங்களும், மாணவியுடன் வேறு சில புகைப்படங்களும் சிக்கியுள்ளன. அதன் பிறகு அந்த மாணவியை எங்கும் காணவில்லை. 

ரயில் முன் கொலை

இரண்டாவது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அப்துல் ஜப்பார் சிங் பேண்ட்ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஒரு சீன கடையில் பணிபுரிந்துள்ளார். மருத்துவ கல்லூரி மாணவி காணாமல் போன நாளில் அவருக்கும் சுக்தேவ் சிங்குக்கும் இடையே பல செல்போன் அழைப்புகள் தொடர்ந்துள்ளதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

டிசம்பர் 10, 2021 அன்று பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதில் இருந்து சிங், போலீசாரின் பிரதான சந்தேக நபராக இருந்தார். அவர் பலமுறை போலீசாரால் விசாரிக்கப்பட்டுள்ளார். ஆனால் போலீசாருக்கு சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web