ஜனவரி 31 தான் கடைசி தேதி!! மின் அட்டையுடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?!

 
மின் அட்டை ஆதார்

தமிழகத்தில் நவம்பர் 28ம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  ஜனவரி  31ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான  கால அவகாசம் ஜனவரி 31 உடன் முடிவடைய உள்ளதாகவும், மேலும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் மின்சார அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இனியும் இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31க்குள் இணைத்திட வேண்டுகிறேன் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை ஆதார் அட்டையுடன் இணைக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது.

ஆதார் செல்போன்

மின் நுகர்வோர்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாக சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.  “தமிழக மின்சார வாரியத்தில் புதிய தொழில் நுட்ப அடிப்படையில்  மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், முதல்வரின் வழிகாட்டுதலின்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-குள் இணைத்திட வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசின் உத்தரவுப்படி வங்கி கணக்குகள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சேர்ந்து இந்தப் பணியும் சேர்ந்துள்ளது.  அத்துடன் மத்திய மின் நுகர்வோர் வாரியம் விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web