உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!! பரபரப்பு வீடியோ!!

 
லத்தீப் அப்ரிடி

பாகிஸ்தானில்  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லத்தீப் அப்ரிடி. வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர்  லத்தீப் அப்ரிடி, பெஷாவர் உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை சுட்டுபடுகொலை செய்யப்பட்டார். மூத்த வழக்கறிஞர் மற்ற வழக்கறிஞர்களுடன் பார் அறையில் அமர்ந்திருந்தபோது ஒருவர் துப்பாக்கியுடன் வந்து நேருக்கு நேர் சுட்டதாக பாகிஸ்தான் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



உடனடியாக பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனிடையில் துப்பாக்கியால் சுட்டவர் கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தாக்குதல் நடத்த பயன்படுத்திய துப்பாக்கி,  அடையாள அட்டை மற்றும் மாணவர் அட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து  பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், “கைபர் பக்துன்க்வாவில் சட்டம் ஒழுங்கு நிலைமை  மிகவும் மோசமடைந்து வருகிறது. இது பெரும் ஆபத்தில் முடியலாம். உடனடியாக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து இதனை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 



அஃப்ரிடியின் கொலைக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ”ஜனநாயகத்தின் வலுவான ஆதரவாளர் என்றும் தீவிரவாதத்தை கடுமையாக எதிர்ப்பவர் ” எனத் தெரிவித்துள்ளார். அப்துல் லத்தீஃப் அஃப்ரிடி,  வழக்கறிஞர் மட்டுமல்ல இவர் தேசியவாத அரசியல்வாதி மற்றும்  பாகிஸ்தானின் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் மற்றும்  தேசிய ஜனநாயக இயக்கத்தின் மூத்த தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web