பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

 
ஜெயலலிதா பாலமுருகன்

நடிகர் சிவாஜி கணேசனின் நெருங்கிய நண்பரும், பழம்பெரும் வசனகர்த்தாவும், கதாசிரியருமான பாலமுருகன் நேற்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

ஆரம்ப நாட்களில் நாடகங்களுக்கு வசனங்களை எழுதி வந்தார் பாலமுருகன். இவரது வசனத்தைப் பேசி பல நாடகங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துள்ளார். பின்னாட்களில் திரையுலகில் சிவாஜி கோலோச்ச தொடங்கியதும், திரைப்படங்களுக்கும் பாலமுருகன் வசனங்களை எழுத துவங்கினார்.

Balamurugan

‘ராஜபார்ட் ரங்கதுரை’, ’வசந்த மாளிகை’ , பட்டிக்காடா பட்டினமா? உட்பட நடிகர் சிவாஜியின் பல படங்களுக்கு பாலமுருகன் வசனங்களை எழுதி உள்ளார். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரை சொந்த ஊராகக் கொண்ட பாலமுருகன், நாடகங்களை எழுதி தயாரித்து தென் மாவட்டங்கள் முழுவதும் அரங்கேற்றி உள்ளார்.  திரையுலகில் வசனகர்த்தாவாக சிவாஜியின் ‘அன்புக் கரங்களிலே’ படத்தின்  மூலமாக  தன் வசன முத்திரையை அழுத்தமாக பதித்திருப்பார்.

பாலமுருகன்

தனது 40 ஆண்டுகால கலையுலக பயணத்தை, ‘நான் கண்ட சிவாஜியும் சினிமாவும்’ என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், நேற்று சென்னையில் காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web