கொண்டாட்டம் ஆரம்பம்!! இன்று கே.எல்.ராகுல் , அதியா ஷெட்டி திருமணம்!!

 
அதியாஷெட்டி

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர்  கே.எல்.ராகுல்.  கர்நாடகத்தில் வசித்து வரும்  30 வயதான  ராகுல் இதுவரை  இந்தியாவுக்காக 45 டெஸ்ட், 51 ஒருநாள் மற்றும் 72 டி.20 போட்டிகளில் விளையாடி அசத்தி உள்ளார். இவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் நடிகை அதியா ஷெட்டியை காதலித்து வந்தார்.  இந்நிலையில் இவர்களின் திருமணம் மும்பை கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில்  இன்று நடைபெற உள்ளது.  நேற்று இரவு முதல்  திருமண கொண்டாட்டங்கள் தொடங்கி விட்ட நிலையில் இன்று மாலை 4 மணி முதல் திருமண நிகழ்வுகள் சடங்குகள் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கே.எல்.ராகுல் அதிஷா
திருமணத்திற்கு முந்தைய  சடங்குகளுக்குப் பிறகு, மாலை 6.30 மணிக்குள் திருமணம் நடக்கிறது. குடும்ப உறுப்பினர்களை தவிர ஒருசில பிரபலங்கள் மட்டும் திருமணத்தில்  கலந்துகொள்கின்றனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆலோசகர் கவுதம் கம்பீர், உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா என கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பிரபலங்கள், நண்பர்கள் பலரும் ராகுல் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர். ரோகித்சர்மா, கோஹ்லி ஆகியோர் நாளை நியூசிலாந்துடன் கடைசி ஒருநாள்  போட்டியில் ஆட உள்ளதால் திருமணத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதியாஷெட்டி

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலும்,  பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும்  காதலித்து வருகின்றனர்.இருவரும் பல இடங்களுக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவும் தவறவில்லை. அதியா ஷெட்டி தமிழில்  12பி, தர்பார் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இருவரும் துபாய் சென்று அங்கு ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். ஜனவரி 21ம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற்று முடிந்துள்ளன.   திருமணத்தை முன்னிட்டு கே எல் ராகுல் குடியிருக்கும் வீடு முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web