கொண்டாட்டம் ஆரம்பம்!! நாளை பொங்கல் சிறப்பு தொகுப்பு முதல்வர் தொடங்கி வைப்பு!!

 
அசத்தல்!! மக்களே பொங்கல் சிறப்பு தொகுப்பை பெற தயாராகிட்டீங்களா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ1000  ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை  வழங்கப்பட உள்ளது. இதில்  அரிசி, சா்க்கரை ஏற்கனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் நாளை ஜனவரி 9ம் தேதிதிங்கட்கிழமை பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள  ரேஷன்கடையில் தொடக்கி வைக்கிறாா். இதே நேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டு ஜனவரி 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக  அரசு அறிவித்துள்ளது

பொங்கல்

தமிழகத்தில்  ஒவ்வொரு ஆண்டும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகைக்கு  தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் பொங்கல் தொகுப்பு வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. புது உத்தரவாக பயனாளர்களுக்கு செங்கரும்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த பணிகளுக்காக ஜனவரி 2ம் தேதி  தொடங்க இருந்த நிலையில்  ஜனவரி 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது. 
இதன் காரணமாக வீடு வீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த டோக்கன் விநியோகமும் தாமதமானது.

இத்தனைக் குளறுபடிகளையும், எதிர் கட்சியாக இருந்த போது மு.க.ஸ்டாலின் எப்படி எதிர்கொண்டு விமர்சித்திருப்பார் என்று நக்கலாக சிரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா என பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

பொங்கல் பரிசு தொகுப்பு

முன்னதாக கரும்பு உட்பட பொங்கல் சம்பந்தமான பொருட்கள் இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web