ஜாலியா கடற்கரையில் பறக்கலாம்!! மெரினா முதல் பெசண்ட்நகர் வரை ரோப்கார் சேவை?!

 
ரோப்கார்

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் தான் ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. மெரினா முதல்  பெசண்ட்நகர் வரை அமைந்துள்ள நீளமான கடற்கரை சாலையை கண்டுகளிக்க விரும்பாதவர்கள் இல்லை. தமிழகம் தொடங்கி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையின் இந்த நீண்டகடற்கரையை ரசிக்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஏராளம்.

ரோப்கார் சேவை

தமிழக அரசு சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழகத்தை அதில் முன்னோடியாக செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் சென்னையை சிங்கார சென்னையாக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக  கலங்கரை விளக்கம் - பெசன்ட் நகர் இடையே 4.6 கி.மீ. நீளத்திற்கு ரோப் கார் சேவை அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடற்கரை ரோப்கார் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய  அரசு தொடங்கியுள்ளது.

மெரினா கடற்கரையில் படகு சவாரி! சுற்றுலாத்துறை அதிரடி!

இந்த ஆய்வில் புவிசார் தொழில்நுட்பம் உட்பட  பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சுற்றுச்சூழல் தாக்கம்  குறித்த  ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகளின் அடிப்படையில்  ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது அதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கும் பணியில் மத்திய சாலைப்போக்குவரத்து  மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் ஆய்வு செய்து அந்த பகுதியில் அமைக்கலாம் என முடிவு செய்த பின்னர் ரோப் கார் சேவை பணிகள் தொடங்க ஆரம்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web