அக்கவுண்ட்ல இருந்த பணத்த காணோம்!! அஜீத் பட பாணியில் 12.7 மில்லியன் டாலர்கள் மோசடி!! புலம்பித் தவிக்கும் உசைன் போல்ட்!

 
உசைன் போல்ட்


சமீபத்தில் தல அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் துணிவு படம் வர்த்தக முதலீடு மோசடி குறித்த கதை. இந்த படத்தில் வங்கிக் கணக்கில் திருட்டு மோசடிகள் நடைபெறுவதை போலவே உலகின் அதிவேக ஓட்டக்காரரான உசைன்போல்ட்டின் வங்கி கணக்கில் இருந்தும் சுமார் 12000  டாலர் பணம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது . இந்த தகவல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  ஜமைக்காவின் ஓய்வு பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட். இவர்  கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முதலீட்டு நிறுவனமான ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் கம்பெனியில் 12.7 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தார்.  இந்த பணம் அனைத்தும் காணாமல் போய்விட்டதாக  அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தொடர் விசாரணைகள் நடைபெற்று  வருவதாகவும், இழந்த பணத்தை திருப்பி தரக்கோரியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உசைன் போல்ட்

அத்துடன்  முதலீட்டு நிறுவனத்திடம் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. உசைன் போல்ட்டின் வங்கிக் கணக்கில் 12.8 மில்லின் டாலர்கள் இருந்த நிலையில் தற்போது வெறும் 12,000 டாலர்கள் மட்டுமே உள்ளன. அடுத்த 10 நாட்களுக்கு உரிய பணத்தை தராவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்,  முதலீட்டு நிறுவனம் மீது மோசடி வழக்கும் பதிவு செய்யப்படும் எனவும் அவரது வழக்கறிஞர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால்  இந்த விவகாரத்தில் ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் முதலீட்டு நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் நிதிசேவைகள் குறித்த வாடிக்கையாளர்களின் கேள்விகளை ஜமைக்காவின் நிதிசேவை ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. 


''பல மில்லியன் டாலர்களை காணவில்லை''. "வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெற ஆர்வமாக உள்ளனர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம், மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தகவல்களை தெரிவிப்போம். இம்மாத தொடக்கத்தில் இந்த மோசடியைக் கண்டுபிடித்ததாகவும், தங்களது வாடிக்கையாளர்களில் பலரின் மில்லியன் கணக்கான டாலர்களைக் காணவில்லை என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

உசைன் போல்ட்
இந்த மோசடி குறித்து, ஜமைக்காவின் நிதியமைச்சர்  விடுத்த செய்திக்குறிப்பில் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது .  சில நேர்மையற்ற நபர்களின் செயலால் அனைவரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த  மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு தணிக்கையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜமைக்காவின் நிதிச் சேவைகள் ஆணையம் அறிவித்துள்ளது.  மேலும் எல்லா நிறுவனத்தின் பணப்பரிவர்தனைகளும் அரசின் அனுமதி பெற்று நடக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை  தங்கள் ஊழியர் ஒருவரிடம் அந்த நிறுவனம்  சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அதே நபர்  இந்த மோசடிக்குக் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  போல்ட்  போலவே பலரது முதலீடுகள் இப்படி மாயமாகியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  விரைவில் இது குறித்து மேலும் சில தகவல்கள் தெரியலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web