போதும் நிறுத்திக்கலாம்.. 3 போர்களால் பாகிஸ்தான் பாடம் கத்துக்கிச்சு.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உருக்கம்!

 
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பங்காளி சண்டை, பாகிஸ்தான் தனியே பிரிந்து சென்றதில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இந்த இரு நாடுகளின் பங்காளி சண்டையில் கடவுளின் சொர்க்கபுரியான காஷ்மீர் களையிழந்து, பனிப் போர்வையில் தீப்பிழம்பாய் இத்தனை வருடங்களும் கனன்று கொண்டிருந்தது.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியுடன் நேர்மையான முறையில் பேச்சு வார்த்தை நடத்த விரும்புகிறேன். காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் இந்தியாவுடனான மூன்று போர்களில் இருந்தும் பாகிஸ்தான் பாடம் கற்றுள்ளது. இது பாகிஸ்தான் மக்களுக்கு துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையும் அறிமுகப்படுத்தி உள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 


இந்திய பொருளாதாரம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிற நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நிதிக்காக உலகை  கெஞ்சி கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது. இது குறித்து சர்வதேச அரசு செய்தி சேனலான அல் அரேபியாவுக்கு பேட்டியளித்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தங்கள் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக ஒத்துக் கொண்டார். மேலும், “காஷ்மீர் போன்ற எரியும் பிரச்சனைகள் எங்களை மேலும் பின்னடைய செய்துள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க எங்களை நேர்மையான பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே இந்திய நிர்வாகத்திற்கும் பிரதமர் மோடிக்கும் எனது செய்தி’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது நேரத்தையும், சொத்துக்களையும் வீணாக்குவது. கடந்த காலங்களில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுள்ளது. இந்தியாவுடனான மூன்று போர்களின் பாதிப்பினால், பாகிஸ்தான் மக்களுக்கு துன்பங்களும், துயரங்களும், வேலைவாய்ப்பின்மையும் தான் அதிகளவில் அறிமுகமாகி உள்ளது. நாங்கள் இப்போது அமைதியாக இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஷெபாஸ் ஷெரீப்

2037ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற வேண்டும் என்பது இந்தியாவின் கனவு. ஏற்கனவே இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 600 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. பாகிஸ்தானிடம் 10.19 பில்லியன் டாலர்கள் மட்டுமே உள்ளது. 

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை உலக பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில் ஷெரீப்பின் இந்த அறிக்கையும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்

From around the web