2022 ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்!! ஃபோர்ப்ஸ் இதழ் வெளியீடு!!

 
திரைப்படங்கள்

2022ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. ஒவ்வொரு வருடமும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை மிகச்சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலில் நா தான் கேஸ் கொடு மலையாள திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது படத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது.

நாதான் கேஸ் கொடு

1.நா தான் கேஸ் கொடு

நம்பர் 1 இடத்தை பிடித்த ‘நா தான் கேஸ் கொடு’ திரைப்படம்  ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், காயத்ரி  நடிப்பில் வெளியானது.  ஒரு மூத்த அமைச்சர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த முன்னாள் திருடனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2.ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்  திரைப்படம் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 1,800 கோடி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. 

போர்ப்ஸ்

3.குட் பை 

குட்பை திரைப்படம் இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் வெளியானது.  துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள உடன்பிறப்புகள்  தந்தையின் வீட்டில் இறுதிச் சடங்குக்காகத் திரும்பும்போது குழப்பமும் துக்கமும் மோதுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 

4.தி ஸ்விம்மேற்ஸ்

தி ஸ்விம்மெர்ஸ் திரைப்படம் சாலி எல் ஹொசைனியின் இயக்கத்தில் வெளியானது.  இளம் சிரிய அகதிப் பெண்களின் சவால்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது.


5.கார்கி
கார்கி திரைப்படம் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய்பல்லவி நடிப்பில் வெளியானது.  குழந்தை பலாத்கார விசாரணையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்திருந்தது.
6.ரோர்சாக் (Rorschach)
ரோர்சாக் திரைப்படம் இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியாகி  ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web