90 லட்சம் வரை கடனுதவி!! சுயதொழில் புரிபவர்களுக்கு அருமையான வாய்ப்பு!!

 
பணம்

தமிழக அரசு வேலை வாய்ப்புக்களை பெருக்கும் வகையிலும், சுய தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து வருகிறது. அதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியின் மூலம் மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ளது. சுய தொழில் புரிவதில் ஆர்வம் உடையவர்களை ஊக்குவிக்கும் வகையில்  மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் ‘பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறுதொழில்
இந்நிலையில் பதப்படுத்தும் உணவு தயாரிக்கும் தொழில்களை ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உயர் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணொய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலைமிட்டாய், முறுக்கு, பேக்கரிபொருட்கள், இனிப்பு மற்றும் காரவகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்துபாவு பால்பதப்படுத்தல், தயிர், நெய், பன்னீர் உள்ளிட்ட பால்பொருட்கள் தயாரித்தல், பல்லின இறைச்சி வகைகள் பதப்படுத்தல் உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன்பெறலம்.
அத்துடன் நிதி நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழில் நடத்திடத் தேவையான சட்டபூர்வ உரிமங்கள் மற்றும் தரச் சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ்உதவிப் பெறத் தகுதி பெற்றவை. திட்டத் தொகையில் 10% முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்தவேண்டும். 90% வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும்.

சென்னை மாநகராட்சி

அரசு 35% மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.சுய உதவிக் குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்கநிலை மூலதனமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யவேண்டும்.இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற A-30, சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் அமைந்த தொழில் மற்றும் வணிகமண்டல இணை இயக்குநர் அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 90030 84478, 94441 14723 ஆகிய எண்களில் தொலைபேசி வழியாகவோ அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web