இந்த 2 ராசிக்காரங்களுக்கு அடிக்க போகுது அதிர்ஷ்டம்!! திடீர் பணவரவு நிச்சயம்!!

 
ராசிபலன் rasibalan astrology rasi


இன்று டிசம்பர் 22,  மார்கழி 7, வியாழக்கிழமை
திதி: தேய்பிறை சதுர்த்தசி திதி 


நட்சத்திரம் :அனுஷம்  காலை 6.33 க்கு பின் கேட்டை 
போதாயன அமாவாசை.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் :
பிற்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை 
எம கண்டம்:
காலை 06.00 மணி முதல் 7.30 மணி வரை 
குளிகன் :
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை 

ராசிபலன்

சுப ஹோரைகள்
 காலை 9 மணி முதல் 11 மணி வரை 
பிற்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை 
மாலை 4 மணி முதல் 6 மணி வரை 
இரவு 8 மணி முதல் 9 மணி வரை 

இன்றைய ராசிபலன் 

மேஷம்

இன்று  சந்திராஷ்டமம். காரியத்தடை, காலதாமதம் உருவாகலாம்.  குழப்பங்களும்,  மன உளைச்சலும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் , வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.  பேச்சில் நிதானம் தேவை.தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று சிறப்பான நாள்.புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரண சேர்க்க உண்டு. இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.சேமிப்புக்கள் உயரும்.

மிதுனம்

இன்று சுபமான நாள்.  குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் சுபகாரியம் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  

கடகம்

இன்று விரயமான நாள். சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். பேச்சில் நிதானம் தேவை. உறவினர்களால் ஆதரவு பெருகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் பெருகும்.  அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஆதாயம் உண்டு.

சிம்மம்

இன்று சோம்பலான நாள். உடல் நலனில் அக்கறை அவசியம். உறவினர்களால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் தொழிலில் லாபம் பெறலாம். அலுவலகத்தில்  பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுபகாரியங்களில் தடை உருவாகலாம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.

கன்னி

இன்று இனிய நாள் . சுபகாரியம் கைகூடும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம்.பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெறலாம். சேமிப்பு உயரும்.அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம்.

துலாம்

இன்று சீரான நாள். வரவுக்கேற்ற செலவு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் பெறலாம். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் விரயங்களை தவிர்க்கலாம்.

விருச்சிகம்

இன்று அமைதியான நாள். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.  பொன், பொருள், சேர்க்கை நிச்சயம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் கடும் உழைப்புக்கு பின்பே பலன் கிட்டும். 

தனுசு

இன்று சவாலான நாள்.  மன உறுதியோடு செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் கடன் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த  உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். 

மகரம்

இன்று அதிர்ஷ்டமான  நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் பணவரவு நிச்சயம். சுபகாரியம் கைகூடும்.  வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் பெறலாம்.  நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். சேமிப்புக்கள் உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ராசிபலன்

கும்பம்

இன்று அமோகமான நாள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக  இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி பெறலாம்.  பழைய பாக்கிகள்  வசூலாகும். உடல் நலன் சிறக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். 

மீனம்

இன்று சுமாரான நாள். திடீர் மருத்துவ செலவுகள் உண்டு. புதிய முயற்சிகளில் முன்னேற்றம் பெறலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு நிச்சயம். கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் தொழிலில் லாபம் பெறலாம். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

From around the web