எம் .சாண்ட் : சபாஷ் ! மத்திய அரசு நிறுவனம் புதுமுயற்சி !!

 
எம்.சாண்ட்


கடந்த காலங்களில் கட்டுமானப்பணிக்கு மணலையே நம்பி இருந்த மக்கள் நிதிஆதாரம் பாதிக்கப்படுவதாலும் ஆற்றின் போக்கு மாறி விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருவதாகவும் தாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் மக்கள் சோற்றில் இனி கைவைக்க முடியும் என ஆங்காங்கே கூக்குரல் இட ஆரம்பித்ததன் விளைவாகவும் ஆற்றில் மணல் அள்ள நீதி மன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது, இந்நிலையில் ஆட்சியாளர்களுக்கு அட்சய பாத்திரமாக விளங்கும் தொழிலை முடிவுகட்ட முடியுமா ஆகவே நீதிமன்றத்தை அரசே நாட இயந்திரங்களைக்கொண்டு இனி மணல் அள்ளக்கூடாது என்றும் ஆட்கள் வேண்டுமானால் சவுளில் அள்ளி போடலாம் என்றும் நிபந்தனையோடு மணல் அள்ள உரிமம் வழங்கியது ஆனால் பல இடங்களில் இந்நிலையை அலட்சியப்படுத்தி இயந்திரங்களைக் கொண்டே மணல் அள்ளப்படுகிறது இது தனிக்கதை சரி மாற்றுவழிதான் என்ன ?

என்.சி.எல்.


கட்டுமானத்துறையில் இன்றைய நிலையில், பெரும் அளவில் மணல் தேவையை ஈடுகட்டுவது எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல்தான். பாறைகளை நொறுக்கி, உருவாக்கப் படும் எம்.சாண்ட் இப்போது, நாடு முழுவதும் கட்டுமானத்துறையில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் நிலக்கரி உற்பத்தி நிறுவனமான நார்தர்ன் கோல் பீல்ட்ஸ் (NCL) நிறுவனம், எம்.சாண்ட் உற்பத்தியில் தடம் பதிக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான அம்லோரி நிலக்கரி சுரங்கத்தில், சுரங்கப் பணியில் இருந்து வெளியேற்றப்படும் மணலை, மூலப்பொருளாக மாற்றி, எம். சாண்ட் உற்பத்தி செய்யவுள்ளதாக, இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மலை

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முன் முயற்சியால், ஆற்றுப் படுகைகளில் மணல் எடுப்பது குறையும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் எம்.சாண்ட் ஏல நடைமுறை அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்சிஎல் நிறுவனம் அதன் 10 திறந்தவெளி சுரங்கங்களில் ஆண்டுக்கு 12 கோடியே 20 லட்சம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. இந்தப் பணியின்போது 41 கோடி கன மீட்டர் மணல் வெளியேற்றப்படுகிறது. இந்த மணல், பெரும் நிலத்தை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்கும் வகையில், தினமும் ஆயிரத்து 500 கனமீட்டர் மணலைப் பயன்படுத்தி, எம்.சாண்ட் தயாரிக்கப்படவுள்ளது. இதனால், ஆண்டுக்கு 3 லட்சம் கனமீட்டர் எம்.சாண்ட் தயாரிக்கப்படும் என்று என்சிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web