சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

 
சபரிமலை

சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இன்று  மாலையே ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதன் பிறகு  ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் 3 முறைகள் காட்சி அளிப்பார். மகர ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். 

சபரிமலை

வருடா வருடம் மகர ஜோதி தரிசனத்திற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.  கூட்ட நெரிசல் காரணமாக ஜோதியை காண்பது மிகவும் சிரமமான காரியம். இதனால் முன்கூட்டியே சபரிமலைக்கு செல்லும் காட்டு பாதை பகுதியில் முகாமிட்டு அங்கேயே பக்தர்கள் தங்கி இருந்து மகர ஜோதி தரிசனத்தைக் காண்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

ஐயப்பன் சபரிமலை இருமுடி

அந்த வகையில் நடப்பாண்டிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பே சபரிமலைக்குச் செல்லும் பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதைகளில் கூடாரம் அமைத்து பக்தர்கள் தங்கி வருகின்றனர். இதனால் தற்போது சபரிமலையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் வரும் வழியில் கூடாரங்களாக காட்சி அளிக்கிறது. இங்கே இருந்து பார்த்தால் தான்  ஜோதி தரிசனம் தெளிவாக தெரியும் என்பதால் இங்கு தங்கியிருக்கிறோம் என்கின்றனர் பக்தர்கள். 

சபரிமலையில் அரவணைப்பாயாசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலுவையில் இருப்பவை அனைத்தும்  சீல் வைக்கப்பட்டுள்ளதால் இனி புதிதாக பாயாசத்தை தயாரித்துதான் கொடுக்க வேண்டும். இன்று முதல் புதிய அரவணைப்பாயாசம் விநியோகிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே சபரிமலையின் பம்பா நதியில் அபாயகரமான 'கோலிபார்ம் பாக்டீரியாக்களின்' எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இதில் பக்தர்கள் குளிப்பதால் மலேரியா, டைபாய்டு போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். பக்தர்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவால் விடுக்கும் நீர் நிலைகளில் குளியல் தேவையா என  மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்நிலைகளில் சாதாரணமாக பாக்டீரியாக்களின் அளவு 500 இருந்தாலே ஆபத்து தான். ஆனால் பம்பையில் இது 6000 என்கிற அளவில் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web