மணக்குள விநாயகர் கோவில் யானை மரணம்! புது வருஷத்துக்கு ஆசி வழங்க லட்சுமி கிடையாது! பக்தர்கள் அதிர்ச்சி

 
யானை லட்சுமி புதுச்சேரி

லட்சுமி பெயரைக் கேட்டாலே புதுச்சேரி முழுக்கவே பிரபலம். யாரிடமும் அதிர்ந்ததில்லை. குழந்தைகளுக்குப் பிரியமான யானை. கடந்த 25 வருடங்களாக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி காலையில் வாக்கிங் போன நிலையில், திடீரென மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தது. தைப் பொங்கல், தீபாவளி, விசேஷம், பண்டிகை என புதுவை மணக்குள விநாயகர் கோவில் களைக்கட்டும் போதெல்லாம் கூட்டம் நிரம்பி வழியும். மணிக்கணக்கில் வரிசையில் நின்று விநாயகரை தரிசித்து செல்பவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி லட்சுமியிடமும் ஆசி வாங்கிச் செல்வார்கள்.

புது வருஷ சம்பிரதாயமாகவே லட்சுமியிடம் ஆசி வாங்குவது பலருக்கும் வாடிக்கை. பாண்டிச்சேரி  மக்களை லட்சுமியின் திடீர் மரணம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.  புதுச்சேரி அருள் மிகு ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1995-ம் ஆண்டில் 5 வயதான லட்சுமி யானை கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், கோயில் முன்பு யானை லட்சுமி நின்றுகொண்டு அங்கும் வரும் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்குவது, கோயில் விழாக்களில் வீதி உலாவின்போது முன்னே செல்வது, முக்கிய பூஜைகளில் பங்கேற்பது என லட்சுமியின் பங்கேற்பு முக்கியமாக இருந்தது.

லட்சுமி யானை கம்பீரமாக கோயில் முன்பு அசைந்தாடியபடி நிற்பதால் அதை வெளிநாட்டிலிருந்து வருவோரும் மிகவும் அன்பாக நேசித்து அதனிடம் ஆசீர்வாதம் பெற்று புகைப்படம் எடுப்பதையும் விரும்பினர்.

Lakshmi-Elephant

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக லட்சுமிக்கு அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது. அதனால், வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் லட்சுமி யானையின் உடல்நலத்தை கண்காணித்து சிகிச்சை அளித்துவந்தனர். யானைப்பாகன்களும் லட்சுமி யானையை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை யானையின் இருப்பிடமான ஈஸ்வரன் கோவிலில் இருந்து நடைப்பயிற்சிக்கு பாகன்கள் அழைத்துச் சென்றனர். அப்போது கல்வே கல்லூரி அருகே சாலையில் திடீரென நின்ற யானை பின் தயங்கித் தயங்கி நடந்தது. அதன்பின் தீடீரென கீழே விழுந்து இறந்தது. மருத்துவர்களும், யானை பாகனும் பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை இறந்ததைத் தொடர்ந்து மணக்குள விநாயகர் கோவில் நடை சார்த்தப்பட்டது.

Lakshmi-Elephant

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கோவிலுக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் இறந்த யானை லட்சுமிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web