ரயில் எஞ்சினையே ஆட்டைய போட்ட பலே ஆசாமிகள்!! பரபரக்கும் வாக்குமூலம்!!

 
ரயில் எஞ்சின்

திருட்டு கும்பல் நகை, பணம், பொருட்களை திருடுவதுண்டு. ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக  கழற்றி திருடிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.
ரயிலில் சிலர் திருடுவதை நாம் கேள்விப்பட்டிக்கிறோம். ஆனால் பீகாரில் ரயில் எஞ்சினையே ஒரு கும்பல் ஆட்டையைப் போட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பீகார் இருந்து வருகிறது.  60 விழுக்காட்டிற்கு மேல் பீகாரில் மக்கள்  மிகவும் வறுமையில் வாழ்கிறார்கள். இதனால் இங்கிருக்கும் மக்கள் வேலை தேடி  வெளி மாநிலங்களுக்குச் சென்று விடுகிறார்கள்.  

திருட்டு

மேலும் சிலர்  அங்கேயே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள். அப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளனர்  காவல்துறையினர். பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக  கழற்றி திருடிச் சென்று விட்டனர்  என்பது தான் அந்த அதிர்ச்சிகரமான தகவல். அந்த ரயில் நிலையத்தின் அருகில் பயன்பாடற்ற சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது. அதன் வழியாகத்தான் இந்த வேலையை செய்துள்ளனர். அதையும் முசாபர் நகரில் உள்ள ஒரு காயலான் கடையில் விற்று பணம் ஆக்கி இருக்கின்றனர். காவல்துறையினர் அந்த திருட்டு கும்பலை அழைத்துச் சென்று ரயில் எஞ்சினின் பாகங்களை மீட்டுள்ளனர்

போலீஸ்
அதே போல்  பீகாரில் புர்னியா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு பழமையான நீராவி ரயில் எஞ்சினை  ரயில்வே எஞ்னியரே விற்றுள்ளார். இதற்கான போலி ஆவணங்கள்   மற்றும் கடிதங்களையும் காட்டியுள்ளார். இதனை காட்டிலும் ராணிகஞ்ச் மாவட்டத்தில் பால்டானியா என்ற ரயில்வே பாலத்திலிருந்து 500 டன் இரும்பு பொருட்களை கூட விட்டு வைக்கவில்லை இன்னொரு கும்பல்.இந்த சம்பவங்கள் எல்லாம் பட்டப்பகலிலேயே நடைபெற்றவை என்பது கூடுதல் தகவல். பாலம் கொஞ்சம் கொஞ்சமாக வீக் ஆவதை தெரிந்த பின்னரே விசாரணை  நடத்தப்பட்டிருக்கிறது. இதனால்  இப்போது பாலத்திற்கு காவல் போட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். இச்சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web