பிரபல தமிழ் பட நடிகைக்கு திருமணம்! பிரபல பாடகரை மணக்கிறார்!

 
நடிகை ஹரிபிரியா

பிரபல பாடகரும், நடிகருமான வசிஷ்டா சிம்ஹாவை மணக்கிறார் பிரபல திரைப்பட நடிகை ஹரிப்ரியா. இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலை இருவரின் பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டதால், இம்மாதம் 26ம் தேதி இவர்களின் திருமணம் நடைப்பெறவுள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

கடந்த 2007ல் துளு மொழியில் வெளியான ‘பாடி’  படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஹரிப்ரியா அதன் பின்னர், 2008ல் ‘மனசுகல மது மதுரா’ படத்தின் மூலமாக கன்னட திரையுலகில் அறிமுகமானார். கன்னடத்தில் ரசிகர்கள் ஹரிப்ரியாவைக் கொண்டாட துவங்கியதை அடுத்து, அதன் பின்னர் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் ‘கனகவேல் காக்க’, ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’, ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கன்னடப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவருக்கும் கன்னட நடிகரும் பாடகருமான வசிஷ்டா சிம்ஹாவுடன் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாகியது.

Haripriya

இந்த நிலையில், சிங்கம் கையில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற ஒரு பதிவை வெளியிட்டு, ‘அன்பே, நான் உன் கையில் இருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். அதற்கு வசிஷ்டா சிம்ஹா பதிலளிக்கையில், ‘நான் எப்போதும் உன் நிழலாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டு, தங்கள் காதலை உறுதி செய்தார்.

இதையடுத்து இருவீட்டு பெற்றோர் சம்மத்துடன் ஹரிப்பிரியா, வசிஷ்டா சிம்ஹா திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் 3-ம் தேதி பெங்களூருவில் நடந்தது. எளிய முறையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இருவீட்டு உறவினர்கள் கலந்துகொண்டனர். பிறகு ஹரிப்பிரியா, வசிஷ்டா சிம்ஹா நிச்சயதார்த்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது.

Haripriya-vasishta

இந்நிலையில், அவர்களது காதல் திருமணம் வரும் 26-ம் தேதி மைசூரு ஸ்ரீகணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் எளிய முறையில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் ஹரிப்பிரியா தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் திரையுலகினரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!

From around the web